திருப்பரங்குன்றத்தில் பொதுமக்கள் போராட்டம்.. அதிகாரிகள் பேச்சுவார்த்தை..!
திருப்பரங்குன்றத்தில் பெரிய ரத வீதியில் திடீரென ஒரு வழி பாதையாக மாற்றியதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் பெரிய ரத வீதி எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி ஒருவழி பாதையாக மாற்றப்பட்டது.
இதனால் 2 கிலோமீட்டர் சுற்றிவர வேண்டிய நிலை ஏற்பட்டதால் பழையபடியே போக்குவரத்தை மாற்ற வேண்டும் என்ற போது மக்கள் அதிகாரியிடம் முறையிட்டனர்.
அதற்கு காவல்துறையினர் மறுப்பு தெரிவித்ததால் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தீர்வு காணப்படும் என போலீசார் தெரிவித்ததையடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.






