--- --:--:-- --

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று பொது விடுமுறை அறிவிப்பு..!

5

புரவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

இந்த நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்று பொதுவிடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

அதற்கு ஈடாக அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று தெரிவித்துள்ளது. அத்தியாவசிய பணிகள் தவிர பிற பணிகளுக்கு பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon