--- --:--:-- --

இனி ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு..!

1

ரும் 2025-26 கல்வியாண்டு முதல், ஆண்டுக்கு 2 முறை பொதுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.

 

மத்திய கல்வி அமைச்சகமானது கடந்த 2023 ம் ஆண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என்றும், மாணவர்கள் விருப்பப்படி ஒரு முறை அல்லது இரண்டு முறையும் தேர்வை எழுதிக் கொள்ளலாம் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்தது.

 

மாணவர்களின் செயல் திறன் எந்த தேர்வில் சிறப்பாக உள்ளதோ அதன் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.தேர்வு குறித்த மாணவர்களின் பதற்றத்தை தணிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

அதாவது, ஓராண்டுக்கு 2 முறை பொதுத் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.பொதுத் தேர்வுக்கு தயாராகும் வகையில் மாணவர்களுக்கு போதுமான கால அவகாசம் வழங்குவதற்காக இந்தமுறை அமல்படுத்தப்பட உள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்தது

 

.சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கும், மாநில பாடத்திட்டங்களின் கீழ் பயிலும் மாணவர்களுக்கும் இந்த முறை பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

ஆனால், இந்த முறை எப்போதிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்படாமல் இருந்தது.இந்த நிலையில், வரும் 2025-26 கல்வியாண்டு முதல் இந்த முறை அமல்படுத்தப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.

Right Menu Icon