திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..!
திருச்சி விமான நிலைய விரிவாக்கத்துக்காக அந்த பக்கத்தில் ஆக்கிரமித்து குடியிருந்து வரும் 63 குடும்பங்களை காலி செய்யுமாறு விமான நிலைய ஆணைய குழு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் வசிக்கும் தங்களை வரும் 23ஆம் தேதிக்கு மாற்றப்பட அறிவிக்கப்பட்டுள்ளதாக குடும்பங்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஏழை எளிய மக்கள் என்பதால் மாற்று இடம் கொடுத்த பிறகு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த மக்கள் திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று குடும்பத்தோடு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.






