தர்மேந்திர பிரதானை கண்டித்து போராட்டம் – திமுக
நிதி தராமல் ஆணவமாக பேசுவதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து பிப்.25ல் போராட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது.
மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி என தர்மேந்திர பிரதான் கூறியதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பிப்.25இல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக மாணவரணி அறிவிப்பு. மேலும் தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தல்





