--- --:--:-- --

பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர்..புகார் அளித்த முதலமைச்சர்..!

6

தென்காசி அரசு கலைக்கல்லூரியில் பிஎஸ்சி பட்டம் பயின்று வரும் மாணவி பேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்து முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

 

தென்காசி மாவட்டம் சுழலையில் இயங்கி வரும் அரசு கலை கல்லூரியில் பாவூர்சத்திரம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறார். வணிகவியல் துறையில் தலைவராக இருந்து வரும் அஜித் என்பவர் கடந்த ஏழு மாதங்களாக phd மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

 

மாணவிகளிடம் அருவருக்கத்தக்க வகையிலும் இரட்டை அர்த்தத்திலும் அஜித் பேசி வருவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் சொல்வதை கேட்காவிட்டால் சான்றிதழில் கையெழுத்து போட முடியாது எனவும் யாரிடம் வேண்டுமானாலும் புகார் தெரிவித்துக் கொள்ளலாம் என அவர் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

 

இந்த விவகாரத்தால் ஆய்வு பணியை முடிக்க முடியாமல் திணறி வந்த மாணவி ஒருவர் அஜித் மீது நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகளுக்கு மாணவி புகார் அனுப்பியுள்ளார்.

 

Right Menu Icon