நடிகர் அஜீத்துக்கு உருவான சிக்கல்..! அஜீத் விடுத்த அறிக்கை..!
நடிகர் அஜீத்துக்கு அவ்வப்போது அவரது ரசிகர்கள் என கூறிக்கொள்ளும் பிரபலங்களால் சிக்கல்கள் உருவாவது வழக்கம். அந்த வகையில் தற்போது அஜித்துடன் நெருங்கி பழகும் வாய்ப்பு பெற்ற திரையுலகப் பிரமுகர் ஒருவர் அஜித்தின் பெயரை பயன்படுத்தி சென்னையில் உள்ள பல்வேறு பிரபல கல்லூரிகளில் மேனேஜ்மென்ட் ஒதுக்கீட்டில் மெடிக்கல் சீட் வாங்கி தருவதாக கூறி சிலரிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் சில கல்லூரி உரிமையாளர்களை தொடர்புகொண்டு அஜித் பெயரை பயன்படுத்தி கல்லூரியில் சீட் கேட்டதாகவும் கூறப்படுகின்றது. மற்றொரு பிரபலம் அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்க இருப்பதாக கூறி சில பைனான்சியர்கள் அணுகி சில கோடிகளை கடனாக கேட்டதாகக் கூறப்படுகின்றது.
இந்த சம்பவங்கள் அஜீத்தின் காதுகளுக்கு எட்டியது. அஜீத் அறிவுறுத்தலின் பேரில் அவரது சட்ட ஆலோசகர் வர பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அண்மை காலமாக தனி நபர்கள் சிலர் நடிகர் அஜித்தின் பெயரை தவறாக பயன்படுத்தி முன்னிலைப்படுத்தும் சம்பவங்கள் கவனத்திற்கு வந்துள்ளதாகவும் பல வருடங்களாக நடிகர் அஜீத்துடன் பணியாற்றிவரும் மேலாளரான சுரேஷ் சந்திரா என்பவர் மட்டுமே அரசின் அனுமதி பெற்ற பிரதிநிதி என்றும் சமூக மற்றும் தொழில் ரீதியிலான விஷயங்களுக்கு சுரேஷ் சந்திராவை தவிர்த்து வேறு யாரையும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நடிகர் அஜித்தின் பெயரை குறிப்பிட்டு எந்த ஒரு நிறுவனமும் தனிநபர் அனுப்பினால் உடனடியாக தகவல் தெரிவிக்கவும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தனது அறிக்கையின் மூலம் எவர் ஒருவரின் மனம் புண்பட்டு விடக்கூடாது என்பதால் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களைக் கூட அஜீத் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






