--- --:--:-- --

காஷ்மீரில் 52 கிலோ வெடிமருந்து..! பயங்கரவாத தாக்குதல் தவிர்ப்பு..!

5.1

காஷ்மீரில் 52 கிலோ வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் தவிர்க்கப்பட்டு இருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

 

காஷ்மீரின் கரேவா என்ற பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது 52 கிலோ வெடிமருந்து சிக்கியது. ஒரு பாலத்திற்கு அடியில் தலா 125 கிராம் எடை கொண்ட 416 பொட்டலங்களில் இந்த வெடிமருந்துகள் வைக்கப்பட்டிருந்ததாக ராணுவத்தினர் தெரிவித்தனர்.

 

வெடி பொருட்களை முன்கூட்டியே கண்டுபிடித்து அதன் மூலம் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் தடுக்கப்பட்டதாக ராணுவத்தினர் கூறியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon