கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பேருந்துகள் பறிமுதல்..!
தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் அதிக கட்டணம் வசூலித்த தனியார் பேருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கேகே நகர் வாகன வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது.
அப்போது அதிக கட்டணம் வசூலித்த பேருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர். பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
இதைப்போல தாம்பரத்தில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உடுமலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.






