சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு..!
விழுப்புரம் மாவட்டம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி திடீரென ரத்த வாந்தி எடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 வயதான சங்கர் என்பவர் அந்த பகுதியில் நடைபெற்ற திருட்டு வழக்கு ஒன்றில் போலீசாரால் கைது செய்யப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் 16ஆம் தேதி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று சிறையில் இருந்த சங்கர் இரண்டு முறை ரத்த வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சங்கர் இன்று காலை உயிரிழந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





