--- --:--:-- --

தீப்பெட்டிக்குள் அடங்கிவிடும் சேலை..!

3

தெலுங்கானாவில் கைத்தறி நெசவாளர் ஒருவர் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தும் வகையில் தீப்பெட்டிக்குள் அடங்கிவிடும் வகையிலான சேலை ஒன்றை செய்துள்ளார்.

 

ராஜ் கண்ணா சில்சிலா மாவட்டத்தை சேர்ந்த நல்லா விஜய் என்ற கைத்தறி நெசவாளர் இந்த செயலை செய்துள்ளார். தை தெலுங்கானா அமைச்சர்கள் கே டி ராமாராவ், சீனிவாஸ் கவுடா ஆகியோர் முன்னிலையில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

 

இந்த சேலையை நல்லா விஜய் அமைச்சர் சமீதா ரெட்டிக்கு பரிசாக வழங்கியுள்ளார். ஒருதீப்பெட்டிக்குள் அடங்கிவிடும் இந்த சேலையை கைகளால் செய்வதற்கு ஆறு நாட்கள் ஆனதாகவும் இயந்திரத்தில் செய்த பொழுது இரண்டு நாட்களில் முடித்து விடலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon