இன்று முதல் பிரதம மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கார் யோஜனா திட்டம் அமல்!
எதிர்காலத்தில், பெரும் சமூக சீர்திருத்தவாதியான மகாத்மா ஜோதிபா பூலே அவர்களின் 200வது பிறந்தநாள் வர இருக்கிறது. அந்த ஆண்டு விழாவிற்கான நிகழ்வுகளை நாம் தொடங்க உள்ளோம். மகாத்மா ஜோதிபா பூலே அவர்களின் கொள்கைகள் மற்றும் அவர் கொடுத்த மந்திரங்களில், பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது என்பது நமக்கு ஒரு உத்வேகமாக அமைந்துள்ளது.
ஏழைகளுக்கு முன்னுரிமை அளித்து, மாற்றத்தின் உச்சத்தை நாம் எட்ட விரும்புகிறோம். என் நாட்டின் இளைஞர்களே, இன்று ஆகஸ்ட் 15, இந்த நல்ல நாளில் நமது நாட்டின் இளைஞர்களுக்காக ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை நாம் தொடங்குகிறோம். இன்று முதல் பிரதம மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கார் யோஜனா திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ், தனியார் துறையில் முதல் வேலை பெறும் இளம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அரசாங்கத்திடமிருந்து ரூ.15,000 கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும். பிரதம மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கார் யோஜனா, இளைஞர்களுக்கு கிட்டத்தட்ட 3.5 கோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.






