--- --:--:-- --

9 கிலோ உடல் எடையை குறைத்த கீர்த்தி சுரேஷ்..!

7

தீவிரமான கார்டியோ பயிற்சிகள் மூலம் தனது உடல் எடையை குறைத்தது குறித்து கீர்த்தி சுரேஷ் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.”2019ல் நான் கொஞ்சம் பருமனாக இருந்தேன். பின், அதனை குறைக்க அதிகமாக கார்டியோ செய்தேன்.

 

ஆனால், வலிமைக்கான பயிற்சிகளை நான் மேற்கொள்ளவில்லை. அதனால் தசையை இழந்துவிட்டேன், எடையும் விரைவாக குறைந்தது” என கூறியுள்ளார். அதற்கான முடிவுகள் மிக தெளிவாக தெரிந்தன, முக கூர்மையான வடிவத்துடனும், மிகவும் மெலிந்த தோற்றத்துடனும் இருந்தது.

 

அந்த நேரத்தில் என் முக அளவுக்கு மீறி ரொம்பவே ஒல்லியாக தெரிந்தது. நான் உடற்பயிற்சி மட்டும்தான் செய்யவில்லை. மற்றபடி தூங்குவது, சாப்பிடுவது, வேலை செய்வது என இதையே மீண்டும் மீண்டும் செய்து வந்தேன்” என்றார் கீர்த்தி.

Right Menu Icon