--- --:--:-- --

பிரதமர் நரேந்திர மோடி இன்று ராமேஸ்வரம் வருகை.. பாம்பன் புதிய ரயில் தூக்கு பாலம் திறப்பு!

2

காலை 10.40 மணியளவில் இலங்கை அனுராதபுரத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் தமிழகத்திற்கு புறப்படுகிறார். பிரதமர் காலை 11:45 மணி அளவில் ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதிக்கு வந்தடைகிறார்.

 

பிற்பகல் 12 மணியளவில் பாம்பன் புதிய ரயில் தூக்கு பாலத்தை திறந்து வைக்கிறார். பிற்பகல் 12.45 மணியளவில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் சாமி தரிசனம் மேற்கொள்ள உள்ளார். பிற்பகல் 1:30 மணி அளவில் நடைபெறும் நிகழ்வில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.

 

பிற்பகல் 2.55 மணியளவில் மண்டபம் பகுதியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்படுகிறார். ஹெலிகாப்டரில் மதுரைக்கு செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

 

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஒட்டி இராமேஸ்வரத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிறந்த நரேந்திர மோடியின் வருகையை ஒட்டி ராமேஸ்வரத்தில் 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

Right Menu Icon