நவ. 19-ல் தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி..!
கோவையில் 19-ம் தேதி நடைபெறும் தென்னிந்திய இயற்கை விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி தமிழகம் வரவிருப்பதாக பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் “தமிழக அரசு விவசாயத்திற்கு உரிய முன்னுரிமை அளிப்பதில்லை.
பிரதமர் மோடி 19-ம் தேதி கோவை வருகிறார். தென்னிந்திய இயற்கை விவசாய மாநாட்டில் கலந்து கொண்டு 50க்கும் மேற்பட்ட விவசாய விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடுகிறார். பிரதமர் விவசாயத்திற்காக பிரத்யேகமாக நேரத்தை ஒதுக்கி வருவது குறிப்பிடத்தக்கது என்றார்.





