தென்மேற்கு டெல்லியின் மஹிபால்பூரில் பேருந்து டயர் வெடித்ததால் பீதி
டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி மக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், தென்மேற்கு டெல்லியின் மஹிபால்பூரில் இன்று காலை பேருந்து டயர் வெடித்ததால் ஏற்பட்ட பலத்த சத்தம் பெரும் பீதியை ஏற்படுத்தியது.
இது குறித்து செய்தி நிறுவனமான பி.டி.ஐ வெளியிட்டுள்ள செய்தியின்படி, மஹிபால்பூரில் உள்ள ராடிசன் அருகே வெடிப்பு குறித்து காலை 9.19 மணிக்கு டெல்லி தீயணைப்பு சேவைக்கு தகவல் கிடைத்தது, அதைத் தொடர்ந்து அவர்கள் மூன்று தீயணைப்பு வாகனங்களை சம்பவ இடத்திற்கு அனுப்பினர்.
இருப்பினும், சம்பவ இடத்தை அடைந்ததும், பேருந்து டயர் வெடித்ததால் பீதி ஏற்பட்டதைக் கண்டறிந்தனர்.





