கன்றுக்குட்டிக்கு பெயர் சூட்டி மகிழ்ந்த பிரதமர் மோடி..!
தனது இல்லத்தில் பராமரிக்கப்படும் பசு ஈன்ற கன்று குட்டிக்கு பிரதமர் நரேந்திர மோடி பெயர் சூட்டி கொஞ்சிய நெகிழ்ச்சியான தருணத்தின் வீடியோவை அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
டெல்லியில் லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பசு கன்று ஈன்றுள்ளது. அதனை பிரதமர் மோடி தனது பூஜை அறைக்கு அழைத்துச் சென்று பூஜை செய்து சால்வை அணிவித்து முத்தமிட்டு கொஞ்சினார்.
கன்றின் நெற்றியில் சுழி இருந்ததை தொட்டு பார்த்தும் ரசித்தார் பிரதமர் மோடி. பதிலுக்கு கன்று குட்டியும் தனது வாஞ்சையை காட்டியது.அதன்பிறகு கன்று குட்டியை பிரதமர் மோடி சுமந்து சென்று அதன் தாயிடம் விட்டார்.
கன்று குட்டியின் நெற்றியில் ஒளி போன்ற வெள்ளை நிறத்தில் சுழி உள்ளதால் அதற்கு தீப் ஜோதி என்று பெயர் சூட்டியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.






