ஏப்ரல் 15-ல் நாகர்கோவில் வருகிறார் பிரதமர் மோடி
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 15-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். முதலில் ஈத்தங்காடு பகுதியில் பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அந்தத் திட்டம் மாற்றப்பட்டு,நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் தொடங்கி, வடசேரி எம்.ஜி.ஆர். சிலை வரை இந்த ரோடு ஷோ நடைபெற உள்ளது.
பிரதமரின் வருகையையொட்டி நாகர்கோவில் நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) ஸ்டாலின் தலைமையில், காவல்துறை அதிகாரிகள் வேப்பமூடு முதல் வடசேரி வரையிலான சாலையை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.





