--- --:--:-- --

மே மாதம் 2ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி..!

2

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக வரும் 2ம் தேதி ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு புறப்படுகிறார். பிரதமர் மோடி தனது பயணத்தின் முதல் கட்டமாக வரும் 2ம் தேதி ஜெர்மனி செல்கிறார்.அப்பொழுது ஜெர்மன் பிரதமர் உடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

 

இந்தோ ஜெர்மன் அரசுகளுக்கு இடையேயான ஆலோசனையில் 16 ஆவது அமர்வில் இரு தலைவர்களும் பேச உள்ளனர். இந்த சந்திப்பில் இரு நாடுகளில் இருந்தும் சில அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர். வர்த்தகம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றிலும் இரு தலைவர்களும் பேசுகின்றனர்.

 

ஜெர்மனி செல்லும் பிரதமர் அங்கு அந்த நாட்டு பிரதமரை சந்தித்து பேச உள்ளார். இதையடுத்து நடைபெறும் நாடுகளின் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார். பயணத்தின் இறுதிக்கட்டமாக பிரான்சுக்கு செல்லும் பிரதமர் அந்நாட்டு அதிபரையும் சந்தித்து பேசவுள்ளார். 2022ஆம் ஆண்டில் பிரதமர் மோடியின் முதல் வெளிநாட்டு பயணம் இது.

 

Right Menu Icon