பிரதமர் மோடி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும்..!
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலை ரத்து செய்ய வேண்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ஆம் தேதியும் அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.
இந்த நிலையில் வழக்கறிஞர் குமார் ஷர்மா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சில மாநிலங்களில் மே மாதமும் சில மாநிலங்களில் ஜூன் மாதம் மாநில அரசின் பதவிக்காலம் முடிவடைகிறது.
ஆனால் ஒரு மாதத்திற்கு முன்பே இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துவது ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
எனவே தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலை ரத்து செய்ய வேண்டும் பிரதமர் நாட்டு மக்களுக்கு பொதுவானவர் என்பதால் 5 மாநில தேர்தலில் அரசியல் கட்சிக்கு ஆதரவு கேட்டு பிரச்சாரம் செய்வதற்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு வரும் மார்ச் 9ஆம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வருகிறது.







