--- --:--:-- --

முன்களப் பணியாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!

1

திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டி கொரொனாவில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற போராடி வரும் முன்களப் பணியாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

கொரொனாவிடம் இருந்து மக்களை காப்பாற்ற உயிரை பணயம் வைத்து குடும்பத்தை மறந்து, சுற்றத்தாரை இழந்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் ஆற்றிய சேவைக்கு ஈடு இணை எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

 

மக்களை பொருட்கள் கோரப் பிடியிலிருந்து மீட்பதில் முன் களப்பணியாளர்கள் அர்ப்பணிப்பும் அயராத உழைப்பும் தியாகமும் தான் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

 

தேச மக்களுக்கு 100 கோடி டோஸ் கொரொனா தடுப்பூசிகளை இலவசமாக செலுத்தி சாதனையை நிகழ்த்தி இருக்கும் சூழலில் முன்களப் பணியாளர்களுக்கு இந்த தேசத்தின் சார்பில் தனது மனப்பூர்வமான நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Right Menu Icon