பதக்கங்களை வென்ற வீரர் வீராங்கனைகளை சந்தித்து பிரதமர் வாழ்த்து..!
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற இந்திய வீரர் வீராங்கனைகளை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
டெல்லியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி இன்றைய விளையாட்டு வீரர்கள் புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்திய நாட்டின் மகள்களின் திறமையை ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெளிப்பட்டதாக தெரிவித்தவர் இந்திய வீராங்கனைகளால் தான் பெருமை அடைவதாக கூறினார்.
போதை பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற செய்தியை நாடு முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும் என விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





