--- --:--:-- --

இந்தியாவில் தடுப்பூசிக்கான முன்னோட்ட நடவடிக்கை அடுத்த வாரம் தொடங்கும்..!

4

மெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த நிலையில் இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகளுக்கான முன்னோட்ட நடவடிக்கை அடுத்த வாரம் தொடங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

ஆந்திரா, அசாம், குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் முன்னோட்ட நடவடிக்கைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கொரொனா தடுப்பு மருந்தை கொண்டு செல்வதற்கான வழி முறைகள் தடுப்பூசி போடும் பணிகள் குறித்த ஒத்திகை நடைபெறும் என்றும் லட்சத்தீவு தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் கொரொனா தடுப்பூசிக்கான பயிற்சிகள் நிறைவடையும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்த நாடு முழுவதும் மாவட்ட அளவில் 7ஆயிரம் பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon