தீபத் திருவிழாவிற்கு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்..!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவில் நான்காவது நாள் இன்று விநாயகர விழா நடைபெற்றது. அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கியது.
தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று பகல் மற்றும் இரவில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்று வருகிறது. நான்காவது நாளில் காலை விநாயகர் வாகனத்திலும் சந்திரசேகர் வாகனத்திலும் மாட வீதிகளில் உலா வந்தன.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். டிசம்பர் 6ஆம் தேதி நடைபெறும் இந்த திருவிழாவிற்கு சுமார் 25 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.





