--- --:--:-- --

திமுக ஆட்சியில் சபாநாயகர் நடுநிலையாக இருந்தாரா? பிரேமலதா விஜயகாந்த் ஆவேச கேள்வி

Prema latha 03

தி.மு.க. ஆட்சி காலத்தில் சபாநாயகர் நடுநிலையாகத்தான் செயல்பட்டாரா என்று, பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் மே தின விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில், தேமுதிக கொடியை விஜயகாந்த் ஏற்றினார். அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

 

அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பிரமேலதா விஜயகாந்த் அளித்த பேட்டி:

 

ஆசிய தடகளத்தில் தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த கோமதி மாரிமுத்துவுக்கு தேமுதிக சார்பில் வாழ்த்துகள். பொன்பரப்பி கிராமத்தில் ஜாதி மோதலை தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

தமிழகத்தில் நடக்கும் 4 சட்டசபை இடைத்தேர்தலில், அ.தி.மு.க.வுக்கு தே.மு.தி.க. முழு ஆதரவு அளிக்கும். 4 தொகுதிகளிலும், விரைவில் நான் பிரசாரம் செய்ய உள்ளேண். அதற்கான தேதியை தே.மு.தி.க. தலைமைக்கழகம் வெளியிடும்.

 

தினகரன் ஆதரவு 3 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில், சபாநாயகர் தான் முடிவெடுக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் என்றால் சபாநாயகரை குற்றஞ்சாட்டத்தான் செய்வார்கள். தி.மு.க. ஆட்சியில் சபாநாயகர் நடுநிலையாகத்தான் இருந்தாரா? இவ்வாறு, பிரேமலதா கூறினார்.

Leave a Reply

Right Menu Icon