--- --:--:-- --

கர்ப்பிணி பெண்ணுக்கு வயல்வெளியில் பிரசவம்!

12

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மருத்துவமனைக்கு செல்லும்போது பிரசவ வலியால் துடித்த பெண்ணிற்கு கிராமத்து பெண்கள் வயல் வெளியில் வைத்து பிரசவம் பார்த்தனர்.

 

கீழ்மிட்டலாம் பகுதியை சேர்ந்த சிலம்பரசன் என்பவரின் மனைவி சோனியாவிற்கு பிரசவ வலி எடுத்ததையடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அங்கிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள நரியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சோனியாவை அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது, ரகுநாதபுரம் அருகே சோனியாவிற்கு பிரசவ வலி அதிகரித்தது.

 

இதனையடுத்து ஆம்புலன்ஸ் அங்கேயே நிறுத்தப்பட்டது. அங்க வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்த பெண்கள் சோனியாவை கீழே இறக்கி வயல்வெளியில் படுக்கவைத்து புடவைகளை சுற்றிப் பிடித்து அங்கேயே பிரசவம் பார்த்துள்ளனர்.

 

சுகப்பிரசவத்தில் சோனியாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நரியம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon