--- --:--:-- --

தமிழக ஆளுநர் பன்வாரிலாலை பதவிநீக்கம் செய்யக்கோரும் மனு தள்ளுபடி

13

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கக்கூடிய 7 பேர் விடுதலை தொடர்பாக முடிவு எடுக்காத ஆளுநரை பதவி நீக்கம் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக இருக்கக்கூடிய நளினி, முருகன் ,பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018 செப்டம்பர் 9ஆம் தேதி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

 

அமைச்சரவை பரிந்துரை அளித்த பிறகும் கடந்த 15 மாதங்களாக அதன் மீது எந்தவித முடிவும் எடுக்காமல் அரசியல் சாசன விதிகளை மீறி தமிழக ஆளுநர் செயல்பட்டு இருப்பதால் அவரை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

 

இதனை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன் மற்றும் ஆர் ஹேமலதா அமர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Leave a Reply

Right Menu Icon