--- --:--:-- --

அறுவை சிகிச்சையின் போது கர்ப்பிணி உயிரிழப்பு..! அரசு மருத்துவமனை மீது புகார்..!

4

புதுக்கோட்டையில் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்ட பெண் மீண்டும் கருவுற்ற நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின்போது உயிரிழந்துவிட்டதாக அரசு மருத்துவமனை நிர்வாகம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

புதுக்கோட்டை அருகே உள்ள கைத்தறி கிராமத்தை சேர்ந்த பீர் என்பவரின் மகள் ராணி பொள்ளாச்சியை சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இதனையடுத்து ராணி கடந்த 2008ஆம் ஆண்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

 

ராணிக்கு கடந்த வாரம் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அவர் மீண்டும் கர்ப்பம் தரித்திருப்பது தெரியவந்த நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கீழ்வரும் ராணியார் மகப்பேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

 

ராணிக்கு கருப்பையில் குழந்தை வளராமல் கருக் குழாயிலேயே வளர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த சிசுவை கலைப்பதற்காக அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

 

அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருக்கும்போது ராணி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். எனவே அவர்கள் மருத்துவமனை மீது புகார் அளித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon