சர்வதேச திரைப்பட விழாவில் மாதவன் நடித்த படம்
55ஆவது சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் நவம்பர் 20 முதல் 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், மாதவன் புதிதாக நடித்துள்ள “ஹிஸாப் பராபர்” என்ற படமும் திரையிடப்பட உள்ளது.
இதுகுறித்து பேசிய அவர், ”இந்தப் படம் ஊழலுக்கு எதிரான போராட்டம் மட்டும் அல்ல. நீதி என்பது எளிதாக கிடைத்துவிடாது என்பதை புரிந்துகொள்ள வைக்கும்” என்றார். நவ.26 மாலை 5:45க்கு ‘ஹிஸாப் பராபர்’ படம் ஒளிபரப்பப்படுகிறது.





