--- --:--:-- --

திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே காரசார விவாதம்..!

2

ஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் இன்றைக்கு திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்ற நிலையில், இதுதொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் கருத்து தெரிவிப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இன்று நடைபெற்ற தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது, இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

 

இந்த தீர்மானத்தை ஆதரித்து பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, 20 முதல் 25 ஆண்டுகளாக சிறையில் வாடிக் கொண்டிருக்கும் 36 இஸ்லாமிய சிறைக் கைதிகளை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். திமுக ஆட்சியில் போடப்பட்ட அரசாணையால் தான், இஸ்லாமியர்கள் விடுதலை ஆவது தடைப்படுகிறது” என ஆவேசமாக பேசினார்.

 

இந்நிலையில், இஸ்லாமிய சிறைக் கைதிகள் விஷயத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன? என்று ஓ. பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த ஓ. பன்னீர்செல்வம், “இஸ்லாமிய சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்” என்றார். அப்போது செய்தியாளர்கள், “இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுவிக்க பாஜக எதிர்ப்பு தெரிவிக்கிறதே என்று கேள்வியெழுப்பினர்.

 

அதற்கு பதிலளித்த அவர், தீர்க்க முடியாத நோய்களால் அவதியுறும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வதில் எந்த தவறும் இல்லை” எனத் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon