நாளை நிமோனியா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்..!
நிமோனியா காய்ச்சலை தடுக்கும் வகையில் குழந்தைகளுக்கு நியூமோக்கள் தடுப்பூசி இலவசமாக செலுத்தும் பணி தமிழகத்தில் தொடங்கியுள்ளது.
மாநில சுகாதாரத்துறை சார்பில் அனைத்து அரசு மருத்துவமனைகளில் நிமோனியா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. தனியார் மருத்துவமனையில் ஆயிரம் ரூபாய்க்கு போடப்படும் தடுப்பூசி அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போடப்படுகிறது.
குழந்தைகளுக்கு ஒன்றரை மாதம், மூன்றரை மாதம் மற்றும் ஒன்பது மாதங்கள் என மூன்று தவணையாக நிமோனியா தடுப்பூசி போடப்படுகிறது. சென்னையில் நாளை முதல் நிமோனியா தடுப்பூசி திட்டம் தொடங்கப்படும் என சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







