--- --:--:-- --

பிபின்ராவத்தின் கடைசி வீடியோ வெளியீடு..!

4

முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உயிரிழப்பதற்கு ஒரு நாள் முன்பு பேசிய வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ஆயுதப் படைகளை நினைத்து பெருமிதம் கொள்வதாக கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்றதன் 50-வது ஆண்டு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

இந்த விழாவில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார். இதன்பின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பேசிய வீடியோவை ராணுவம் வெளியிட்டுள்ளது. அவர் தமிழகத்திற்கு புறப்படுவதற்கு முதல் நாள் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

அதில் நமது ஆயுதப் படைகளை கண்டு பெருமிதம் கொள்வோம் எனக் கூறியுள்ளார். அனைவரும் இணைந்து வெற்றியை கொண்டாடுவோம் என்றும், இந்திய ஆயுதப் படையில் துணிச்சல் மிகுந்த வீரர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon