ஆசிரியர் தகுதி தேர்வு பெண் பட்டியலில் நடிகையின் படம்.!
பீகாரில் ஆசிரியர் தகுதி தேர்வு பெண் பட்டியலில் பிரபல மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படம் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதித் தேர்வு கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்றது. முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டதில் சில தொழில் நுட்பப் பிரச்சினைகள் காரணமாக உருது, சமஸ்கிருதம் மற்றும் அறிவியல் ஆகிய மூன்று பாடங்களில் மதிப்பெண்கள் வெளியிடப்படாமல் இருந்தது.
தற்போது சரி செய்யப்பட்டு அரசு இணையதளத்தில் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. அது ரிஷிகேஷ் குமார் என்ற மாணவரின் மதிப்பெண் பட்டியலில் அவரது புகைப்படத்திற்கு பதிலாக மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.






