--- --:--:-- --

நோயாளிக்கு காலாவதியான குளுக்கோஸ் ஏற்றப்பட்ட அதிர்ச்சி சம்பவம்..!

3

சிவகங்கை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு காலாவதியான குளுக்கோஸ் ஏற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நோயாளியின் உறவினர்கள் மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

சிவகங்கையை சேர்ந்த ராமதாஸ் என்ற முதியவர் உடல்நலக்குறைவு காரணமாக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டுள்ளது.

 

அப்போது அவருக்கு ஏற்பட்ட குளுக்கோஸ் பாட்டீல் காலாவதியானது கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அங்கு பணியில் இருந்த உதவியாளரிடம் கேட்டபொழுது ஒன்று அல்லது இரண்டு மாதம் காலாவதி ஆனால் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளனர்.

 

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்தவர் பணியில் இருந்த மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் இதுகுறித்து உயர் மருத்துவ அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

Leave a Reply

Right Menu Icon