நள்ளிரவில் தொழுகையில் ஈடுபட்டதாக வெளியான புகைப்படம்
திருப்புத்தூரில் நள்ளிரவில் சாலையில் ஏராளமானோர் தொழுகையில் ஈடுபட்டதாக பொய்யான தகவலை பரப்பியுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபடுவது போன்ற புகைப்படம் 2018 ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் எடுக்கப்பட்டது என்றும் இதுபோன்ற பொய்யான செய்தியை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விஜயகுமார் எச்சரித்துள்ளார்.







