--- --:--:-- --

1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அனுமதி..! முக்கிய அறிவிப்புகள் என்னென்ன..?

5

மிழ்நாட்டில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அனுமதி அளித்துள்ள தமிழக அரசு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குறைதீர் கூட்டங்களை நடத்தவும் அனுமதி அளித்து தளர்வுகளை அறிவித்துள்ளது.

 

மாநிலத்தில் கண்காணித்து கொரொனாவை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 

அதனை தொடர்ந்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் எதிர்வரும் பண்டிகை காலங்களில் கருத்தில் கொண்டு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு அக்டோபர் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள், பெற்றோர் அளித்த கருத்துக்களின் அடிப்படையில் பள்ளிகளை திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

சமுதாயம், அரசியல், கலாச்சார நிகழ்வுகள், திருவிழாக்கள், குடமுழுக்கு விழாக்களுக்கு தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் மத வழிபாட்டுத்தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டங்களையும் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

பண்டிகை காலத்தில் பொதுமக்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் கூட்டம் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Right Menu Icon