பெரியார் சிலை மீது காவி சாயம் பூசி அவமதிக்கப்பட்ட சம்பவம்..!
திண்டுக்கல்லில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் அருகே உள்ள பெரியார் சமத்துவபுரத்தில் பெரியார் சிலையை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதையும் மீறி பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி மர்ம நபர்கள் அவமதித்துள்ளனர். தகவலறிந்த காவல்துறையினர் இரவோடு இரவாக மின் இணைப்பைத் துண்டித்து காவி சாயம் மீது கருப்பு வர்ணத்தை தீட்டி பெரியார் சிலையை புதுப்பித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பழனி திமுக எம்எல்ஏ செந்தில்குமார் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசிய மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.







