காலையில் வாக்கிங் வந்த கரடியால் அச்சுமடைந்த மக்கள்..!
குன்னூரில் அதிகாலையில் வாக்கிங் சென்ற கரடியால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. உணவு தேடி குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் கரடியால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் குன்னூரில் உள்ள தனியார் பள்ளியின் வளாகத்தில் கரடி புகுந்ததால் அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர், தகவலறிந்து வந்த வனத்துறையினர் கரடியை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.





