--- --:--:-- --

டெல்லியில் நீடிக்கும் கடும் குளிரால் மக்கள் அவதி

15

டெல்லியில் நிலவும் கடும் குளிரில் உறைவிடம் இல்லாமல் தவித்த வெளிமாநிலத்தவர்கள் அரசு காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் கடந்த சில தினங்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. நேற்று காலை சத்யம் பகுதியில் 5.8 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்கு குளிர் பதிவானது.

 

அது இன்று காலை 8. 8 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைந்த போதும் கடும் குளிர் நிலவியது. டெல்லியில் கடும் குளிரால் உறைவிடம் இல்லாமல் தவித்த உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அரசு காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

Leave a Reply

Right Menu Icon