--- --:--:-- --

பைக்குக்கு வழி விடாததால் பஸ் டிரைவரை கத்தியால் தாக்கிய நபர்கள்..!

6

சென்னை வண்ணாரப்பேட்டையில் இருசக்கர வாகனத்திற்கு வழி விடாமல் சென்றதால் அரசு பேருந்து வழிமறித்து ஓட்டுநரை கத்தியால் தாக்கிய நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் தாக்குதல் குறித்த காட்சி சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

 

பிராட்வேயில் இருந்து மணலி வரை செல்லும் தடம் எண் 56 டி பேருந்து வண்ணாரப்பேட்டை திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த பொழுது இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த பரத்குமார், சந்தோஷ், ஹரிஷ் குமார், பாபு ஆகியோர் பேருந்து வழிமறித்து ஓட்டுநர் வஜ்ரவேலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

அப்பொழுது காயமடைந்ததால் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து நான்கு பேரையும் கைது செய்தனர்.

 

Right Menu Icon