--- --:--:-- --

கரூரில் பரபரப்பு.. நள்ளிரவில் கொழுந்து விட்டு எரிந்த காடு..!

7

ரூர் மாவட்டம் குளித்தலை அருகே காவிரி ஆற்றுப்படுகையில் தைலம் மரக்கட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. குளித்தலை பெரிய பாலம் அருகே திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலை அருகே காவிரி ஆற்றப்படுகையில் மலத்துறைக்கு சொந்தமான தைலம் மர காடுகள் உள்ளது.

 

இந்த பகுதியில் அடிக்கடி மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு சென்றதும் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறை அணைப்பதும் தொடர்கதை ஆகியுள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அணைக்கப்பட்டது.

 

இந்த நிலையில் குளித்தலை அருகே காவிரி ஆற்றப்படுகையில் தைலமரக்காட்டில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் இளைஞர்களுடன் இணைந்து தீயை அணைத்தனர்.

 

Right Menu Icon