திடீரென வீடுகளில் விரிசல் விழுந்தால் பதறிப்போன மக்கள்..!
நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த கோகூடல் கிராமத்தில் சாலை மற்றும் வீடுகளில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். கிராமத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு சாலைகளிலும், வீடுகளிலும் விரிசில் ஏற்பட்டுள்ளது.
இதனால் பீதி அடைந்த கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்து ஆய்வு மேற்கொண்ட துறைசார் அதிகாரிகள் நிலத்தடியில் நீர் சென்று கொண்டிருப்பதால் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறியதுடன் மண் மாதிரிகளை பரிசோதனைக்கு எடுத்து சென்றனர்.
இந்த விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் புவியியல் துறை வல்லுநர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





