காசாவில் பட்டினியால் மக்கள் இறக்கும் நிலை..!
காசாவில் பட்டினியால் மக்கள் இறக்க வாய்ப்பிருப்பதாக ஐ.நா கவலை தெரிவித்திருக்கிறது காசா நகரின் வடக்கு பகுதியில் இருக்கும் 11 லட்சம் மக்களை அடுத்த 24 மணி நேரத்திற்குள் வெளியேற்றப்பட்டால் நிலைமை மோசமாகும் என ஐநா தெரிவித்துள்ளது.
காசாவை விட்டு வெளியேற வேண்டும் என்றால் தெற்கு பகுதியில் உள்ள காசா நகரத்திலிருந்து எகிப்து எல்லையை அடைய வேண்டும் நேற்று இரவு காசாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் விமானப்படை தாக்குதல் நடத்தி வரும் நிலையில் வடக்கு பகுதியில் இருக்கும் 11 லட்சம் மக்கள் செய்வதறியாது அங்கேயே இருக்கிறார்கள்.
எனவே அடுத்த 24 மணி நேரத்திற்குள் அப்பாவி மக்களை வெளியேற்றிவிட்டால் உயிரிழப்புகள் அதிகரிப்பதோடு உணவு, குடிநீர் இன்றி இறப்பவர்களின் எண்ணிக்கை பட்டினியால் இருப்பவர்களை எண்ணிக்கை அதிகரிக்கும் என்று ஐநா கவலை தெரிவித்துள்ளது.





