--- --:--:-- --

அனைத்தும் இலவசம் ..தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்த பிரியங்கா..!

3

பிசி, எஸ்சி, எஸ்டி பிரிவுகளுக்கு நிதி வழங்கிட நாடு தழுவிய சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் மாநிலத்தில் காங்கிரஸ் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

 

அப்பொழுது கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வகுப்புவாரி கணக்கெடுப்பு, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.

 

12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இலவச கல்வி மற்றும் மாதம் தோறும் 500 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரையில் உதவி தொகை வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். 500 ரூபாய்க்கு சிலிண்டர் விற்பனை, பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய், பொது மக்களுக்கு 100 யூனிட் இலவசம் மின்சாரம் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்ற வாக்குறுதிகளை பிரியங்கா காந்தி வழங்கினார்.

 

Right Menu Icon