இனி ரேஷன் கடையில் பேடிஎம்..!
புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பேடிஎம் மூலமாக பணம் செலுத்தும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து ஒரு கிலோ தக்காளி ₹ 60 ரூபாய்க்கு விற்பனை செய்து தொடங்கி வைத்தார்.
முதற்கட்டமாக 350 கடைகளில் பேடிஎம் மூலமாக பணம் செலுத்தும் திட்டம் தொடங்கியுள்ளதாகவும் விரைவில் 1300 கடைகளுக்கு திட்டம் விரிவுபடுத்தப்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.






