கேரளாவில் அமெரிக்க பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை..!
கேரளாவில் அமெரிக்க பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட புகாரில் இரண்டு இளைஞர்களிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. கொல்லம் அருகே உள்ள மாதா அமிர்தாளை ஆசிரமத்திற்கு 44 வயதான அமெரிக்க பெண் ஒருவர் வந்துள்ளார்.
பின்னர் அவர் அருகில் உள்ள கடற்கரைக்கு சென்ற பொழுது அங்கிருந்த இரண்டு உள்ளூர் இளைஞர்கள் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது.





