பட்டினச்சேரி கச்சா எண்ணெய் விவகாரம் : நிரந்தர தீர்வு காண எடப்பாடி வலியுறுத்தல்..!
நாகை மாவட்டம் பட்டினச்சேரியில் வேலை நிறுத்த போராட்டம் திரும்ப பெறப்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கடலில் கலந்ததை கண்டித்து மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இதனிடையே சிபிசிஐ நிர்வாகம், வருவாய்த்துறை மற்றும் மீனவர்களுக்கிடையே முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் சுமூக முடிவு எட்டப்பட்டதால் போராட்டத்தை மீனவர்கள் கைவிட்டனர்.
நாகை மாவட்டத்தில் கச்சா எண்ணெய் கசிவின் காரணமாக பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களுக்கு தமிழக அரசு உதவி வேண்டும் என எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை விடுத்துள்ளார்.
கச்சா எண்ணெய் கடலில் கலந்து ஏற்பட்ட பாதிப்பை சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் நீர்வளத்துறை அமைச்சர் அனிதா ராமகிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிடவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.






