பிரதமர் மோடிக்கு பாரிவேந்தர் வாழ்த்து..!
நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக பதவி ஏற்க உள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தேசத்தின் உணர்ச்சிக்காக அர்ப்பணித்துக் கொண்ட தலைவரான பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளதற்கு உளமாற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த வெற்றியை சாத்தியமாக்கி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு இந்திய ஜனநாயக கட்சி சார்பில் தனது வாழ்த்துக்களை உரித்தாக்கி கொள்வதாகவும் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





