காதலித்த மகளை அடித்துக் கொன்ற பெற்றோர் கைது..!
கர்நாடக மாநிலம் பிரியபட்னாவில் வேறு சாதி இளைஞரை காதலித்த கல்லூரி மாணவியை பெற்றோர் அடித்து கொலை செய்துள்ளனர். பிரியபட்னாவை சேர்ந்த ஷாலினி என்ற கல்லூரி மாணவி அதே பகுதியை சேர்ந்த இளைஞரை காதலித்துள்ளார்.
பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ஆனால் இளம்பெண் காதலில் உறுதியாக இருப்பதால் பெற்றோர் அவரை அடித்தே கொலை செய்துள்ளனர். கொலை செய்ததை ஒப்புக் கொண்ட பெற்றோரை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.






