--- --:--:-- --

திருவாடானை அருகே இருசக்கர வாகன விபத்தில் ஊராட்சி செயலாளர் பரிதாப உயிரிழப்பு

11

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள குளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வைரவன் மகள் சகாதேவன் (51) இவர் கூகுடி ஊராட்சியில் ஊராட்சி செயலாளராகப் பணியாற்றி வந்தார்.=இன்று மதியம் தனது பணி நிமித்தமாக அலுவலக வேலைகளை முடித்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் திருவாடானை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

 

 

சம்பூரணி அருகே மங்கள்குடி சாலையில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக வாகனம் அவரது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் சகாதேவன் பலத்த காயமடைந்தார்.
​அவரை மீட்ட அங்கிருந்தவர்கள், முதலுதவி சிகிச்சைக்காக திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

 

அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்பு, மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை பலனின்றிஅவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிணக்கூறு ஆய்விற்காக சிவகங்கை அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து திருவாடானை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon